Chat with us on WhatsApp
Hello 👋,
How can we help you today?
காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தும் படைப்புகளின் பாமாலைகளை ஆண்டுதோறும் அணிவித்து மகிழ்ந்திட, கடந்த 2002 ஆம் ஆண்டில் திரு.மாணிக்கம் தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் முதல்வர் அவர்களால் தமிழ் இலக்கிய மன்றம் தொடங்கப்பட்டது. தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பாக மாணவர்களின் கைவண்ண கோலங்கள், ஓவியம் வரைதல், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி பட்டிமன்றம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் தமிழின் பெருமையை போற்றும் வகையில் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், கருத்தரங்கம் என பல கவிமாலைகளை தமிழ் அன்னைக்கு சூட்டுவதில் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றம் பெருமை கொள்கின்றது.
நம் கல்லூரியில் தாய்மொழியின் பெருமையையும், தமிழின் பாரம்பரியத்தையும், தமிழரின் கலாச்சாரத்தையும், மேலும் அறிவு சார்ந்த எண்ணங்களையும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பதுதான் இந்த தமிழ் இலக்கிய மன்றத்தின் நோக்கமாகும்.
✔ மாணவர்களின் தனித் திறனை வளர்த்தல்
✔ கல்வியின் உயரிய விழுமியங்களை அடைதல்
✔ நாட்டுப்பற்று மிகுந்த சிறந்த குடிமகனாக விளங்கிடவும், மாணவர்களின் நற்பண்புகள், அறிவியல் சிந்தனை, மனித நேயம் ஆகியவற்றை மேம்படுத்துதல்.
✔ மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் கவிதைப் போட்டி, கட்டுரைப்போட்டி ,பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி,பட்டிமன்றம் போன்ற போட்டிகளுக்கு ஆயத்தம் செய்தல்.
✔ பாடத்திட்டம் சார்ந்த பாட இணை செயல்பாடுகள்.
✔ பாடத்திட்டம் சாரா செயல்பாடுகள்.